உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  விக்ரஹம் பிரதிபலிக்கும் நான்கு நற்குணங்கள்; சிருங்கேரி ஜகத்குரு அருளுரை 

 விக்ரஹம் பிரதிபலிக்கும் நான்கு நற்குணங்கள்; சிருங்கேரி ஜகத்குரு அருளுரை 

“நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபடுவதன் வாயிலாக, நல்ல குணங்கள் பக்தர்களுக்கும் கிடைக்கும்,” என, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பார தீ சுவாமிகள் அருளுரை வழங்கினார். டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், உத்தர குருவாயூரப்பன் கோவிலுக்கு விஜயம் செய்தார். நித்யபூஜை கேரள பாணியில் கட்டப்பட்டிருக்கும் கோவிலில், குருவாயூரில் பூஜை நடப்பது போல நித்யபூஜை நடப்பதை பாராட்டினார். அந்நிகழ்ச்சியில், சிருங்கேரி ஜகத்குரு பக்தர்களுக்கு வழங்கிய அருளுரை: விக்ரஹம் என்பதற்கு நான்கு குணங்கள் உள்ளன. ஒன்று, விக்ரஹம் யார் மீதும் வேற்றுமை பாராட்டாது; விருப்பு, வெறுப்பு அற்றது. இரண்டாவது, யாரிடமும் யாசகம் கேட்காது. மூன்றாவது எதற்கும் மற்றவர் பேரில் அபிப்ராயமோ, கண்டனமோ தெரிவிக்காமல் இருப்பது. நான்காவது, ஒருவருடைய அழைப்பு இல்லாமல் உற்சவ விக்ரஹம் வெளியே செல்வது இல்லை. அபிஷேக ஆராதனை இத்தகைய நால்வகை நற்குணங்களை பிரதிபலிக்கும் விக்ரஹத்தை, தொ டர்ந்து வழிபடுவதால், நல்ல குணங்கள் பக்தர் களு க்கும் கிடைக்கும். அறிவற்றவன் எவ்வாறு இருப்பான் என்பதை, காளிதாசர் தன் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். சாப்பிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் அலைபவன், பேசும்போது உரக்க சிரிப்பவன், கடந்த காலத்தை சதா நினைத்துக் கொண்டிருப்பவன், இருவர் பேசும் போது உள்நுழைபவன், தனக்கு ஏற்ப ட்ட நல்லதை நினையாமல் இருப்பவன், பொதுவெளியில் ஒருவரை விமர்சிப்பவன் போன்ற குணங்கள் கொண்ட ஒருவனே அறிவற்றவன். பக்தர்கள் ஒவ்வொருவரும், ஒழுக்கமானவராகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் இருக்க வேண்டு ம். இவ்வாறு அருளாசி வழங்கினார். முன்னதாக, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மண்டல பூஜை ஏற்பாடுகளை பார்வையிட்ட சுவாமிகள், மயூர் விஹார் சுப சித்தி விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். லலிதாம்பிகை கோவிலில் புதிய ஒரு ஸ்ரீ சக்கர மேருவினை ஜகத்குரு பிரதிஷ்டை செய்தார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி