திரு.வி.க., நகர், புழல், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 43; மாதவரம் பணிமனையில், தடம் எண் 242 பேருந்து ஓட்டுனர்.கடந்த 11ம் தேதி, செங்குன்றத்திலிருந்து பாரிமுனைக்கு பேருந்தை இயக்கினார்.கதிர்வேடு அருகே வந்த போது, ஆட்டோ டிரைவர் ஒருவர், ரெட்டேரி சந்திப்பு வரை பேருந்திற்கு வழி விடாமல் சென்றதால், ரெட்டேரி சந்திப்பில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம், ஓட்டுனர் மணிவண்ணன் புகார் அளித்தார்.பயந்து போன ஆட்டோ டிரைவர், அங்கிருந்து தப்பினார். பின், பேருந்து அகரம் சந்திப்பு சிக்னல் அருகே நின்ற போது, அங்கு காத்திருந்த அதே ஆட்டோ டிரைவர், கல்லால் மணிவண்ணனை தாக்கிவிட்டு தப்பினார். இதில் காயமடைந்த அவர், திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், புழல் விநாயகபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார், 24, கொளத்துாரைச் சேர்ந்த பிரேம்குமார், 39, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில் பிரேம்குமார் மீது, ஏற்கனவே 24 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.