உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமல்லை கடலில் மூழ்கி ஒரே நாளில் மூவர் பலி

மாமல்லை கடலில் மூழ்கி ஒரே நாளில் மூவர் பலி

மாமல்லபுரம், சென்னை அடுத்த சோமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன், 34; தனியார் நிறுவன ஊழியர். நாகல்கேணியைச் சேர்ந்தவர் பாலு, 44; சுமை துாக்கும் தொழிலாளி. இருவரும் நண்பர்கள்.நேற்று, குடும்பத்துடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். சிற்பங்களை கண்டுகளித்து, மாலை 3:30 மணிக்கு, கடற்கரை கோவில் பகுதி கடலில் குளித்தனர். அப்போது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செலலப்பட்ட அவர்கள், நீரில் மூழ்கினர். மீனவர்கள் விரைந்து சென்றும், அவர்களின் உடல்களையே மீட்க முடிந்தது. சிக்கிய மற்றொருவர் உயிருடன் மீடகப்பட்டார்.அதேபோல், உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 36. மாநகர் பேருந்து ஓட்டுனர். குடும்பத்துடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்தார்.மாலை 5:00 மணிக்கு, அதே பகுதி கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி மூழ்கினார். மீனவர்கள் மீட்ட போது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது. மாமல்லபுரம் போலீசார், மூவரின் உடல்களையும் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி