உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அனுமதி பெற முடியாமல் தவித்த வியாபாரிகள்

அனுமதி பெற முடியாமல் தவித்த வியாபாரிகள்

செங்குன்றம், செங்குன்றத்தில், வணிகர் தின மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடத்த, செங்குன்றம் போலீசாரிடம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டது.'தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தொகுதிக்கான தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்' என கூறி, திருப்பி அனுப்பினர். போலீசாரின் வழிகாட்டுதல் படி, அம்பத்துாரில் உள்ள, ஏழாவது மண்டல அலுவலகத்திற்கு சென்றனர். செங்குன்றம் பகுதி, மாதவரம் தொகுதிக்குட்பட்டது என்பதால், மாதவரம் மண்டல அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள தேர்தல் அலுவலரிடம் அனுமதி கோரலாம் என, தெரிவித்தனர். அதன் பிறகு, மாதவரம் சென்று மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை