உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எரியாத தெருவிளக்கு, சுகாதார சீர்கேடு அம்பேத்கர் பிரதான சாலையில் அவலம்

எரியாத தெருவிளக்கு, சுகாதார சீர்கேடு அம்பேத்கர் பிரதான சாலையில் அவலம்

மாதவரம், மாதவரம் மண்டலம், பொன்னியம்மன்மேடு, அம்பேத்கர் நகர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி தெரு விளக்குகள், மூன்று மாதங்களுக்கு மேலாக எரியவில்லை.இரவில் கும்மிருட்டாக காட்சியளிக்கும் இப்பகுதியில், வழிப்பறி உள்ளிட்ட திருட்டுகள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், அப்பகுதியில் வசிப்போர் நிம்மதியின்றி தவிக்கின்றனர்.மேலும், பிரதான சாலையில் புதிய மழைநீர் வடிகால் பணிக்காக, நாகாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயும், ஐந்து மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டது.புதிய வடிகால் பணி முடிந்த பிறகும், பழைய கால்வாய் அடைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதில் குப்பை கழிவுகளுடன், கழிவுநீரும் தேங்கி சுகாதார சீர்கேடு நீடிக்கிறது.இதன் காரணமாக, தெருவில் வசிப்போர் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.இது குறித்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.மேற்கண்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளன.இது குறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:எங்கள் பகுதியில், அடிப்படை வசதிக்கான பிரச்னைகள் தொடர்கின்றன. தெரு விளக்கு, கழிவுநீர் தேக்கம் மட்டுமின்றி, குப்பையும் பிரதான சாலைகளில் மொத்தமாக தேக்கி வைக்கப்பட்டு, வாரத்திற்கு ஒருமுறை தான் அகற்றப்படுகிறது. அப்படி தேக்கி வைக்கக் கூடாது என்ற அரசு உத்தரவையும் மீறி, குப்பை அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள், அடாவடி செய்து வருகின்றன. இதனால், சுகாதார சீர்கேட்டில் சிக்கி அவதிக்குள்ளாகி உள்ளோம்.மண்டல அதிகாரிகளிடம் புகார் செய்தால் அலட்சியப்படுத்துகின்றனர். தினமும் குப்பையை அகற்றி, எங்கள் பகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை