உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 106 கிலோ குட்கா பறிமுதல் ராஜஸ்தான் வாலிபர் கைது

106 கிலோ குட்கா பறிமுதல் ராஜஸ்தான் வாலிபர் கைது

கோவை:கோவையில், 106 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு, ஆர்.ஜி., வீதியில் உள்ள ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பதுக்கி வைத்திருந்த 106 கிலோ குட்கா, மொபெட், ஒரு மொபைல் போன், 15 ஆயிரத்து 230 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, குடோனில் குட்காவை பதுக்கி வைத்திருந்த பீடா கடை உரிமையாளர் ராஜஸ்தானை சேர்ந்த நரேந்திர சிங், 23 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை