பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரவுண்டானா அமைக்கப்படும் நிலையில், சிக்னல் அகற்றப்பட்டால், அதனை வேறு ரோட்டில் பயன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி, வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இதனால், நகரில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பபோக்குவரத்து சார்ந்தபிரச்னைகளை எதிர்கொள்வது பெரும் சவாலாகஉள்ளது.நகரில் முக்கிய பகுதிகளில், சீரான போக்குவரத்துக்கு, சிக்னல்கள் இன்றி ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை, கடைவீதி சந்திப்பு, தேர்நிலையம், உடுமலை - பல்லடம் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில், ரவுண்டானா அமைக்கப்பட்டது.தற்போது, திருவள்ளுவர் திடல் பகுதியிலும் ரவுண்டானா அமைக்கப்படவுள்ள நிலையில், அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சிக்னல் அகற்றப்படவுள்ளது. அகற்றப்படும் அந்த சிக்னல்களை, வீணாக்காமல் வேறு பிரதான ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயன்படுத்தவும் கோரிக்கைஎழுந்துள்ளது.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:பெரு நகரங்களின் முக்கியமான சாலைகளில் பயண துாரத்தை, குறைப்பதற்கு பாலங்கள், சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் பெரிதும் உதவுகின்றன. அத்தகைய கட்டமைப்பு பொள்ளாச்சி நகரில் கிடையாது.வாகனங்கள் போக்குவரத்து சந்திப்புகளில் தான் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, முக்கியமான சந்திப்புகளில் ரவுண்டானா அமைப்பதால், போக்குவரத்து நெரிசல், காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்து வருகிறது.இதேபோல, சிக்னல்களை தவிர்த்து 'யு--டர்ன்' அமைப்பதால், வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது. இதனால், பிரதான சந்திப்புகளில் உள்ள சிக்னல்கள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.