உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

கல்லுாரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

போத்தனூர் : இன்ஜி, கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவர் உள்ளிட்ட கும்பலை, போலீசார் தேடுகின்றனர்.ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள தனியார் இன்ஜி., கல்லூரி, இறுதியாண்டு மாணவர் சிவகங்கையை சேர்ந்த ஆதித்யா, 21. கடந்த 22ம் தேதி இரவு அப்பகுதியிலுள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதே கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் இறுதியாண்டு பயிலும் ஹரீஸ்வரன், 21 என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. தொடர்ந்து, ஆதித்யா அங்கிருந்து ஸ்ரீராம் நகரிலுள்ள தனது நண்பர் கமலேஷின் அறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் ஹரீஸ்வரன் ஐந்திற்கும் மேற்பட்டோருடன் அங்கு சென்று, அரிவாளால் ஆதித்யாவின் தலை, தொடையில் வெட்டி தப்பினார். நண்பர்கள் ஆதித்யாவை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இவரது புகாரில் செட்டிபாளையம் போலீசார் ஹரீஸ்வரன் உள்ளிட்ட கும்பலை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை