உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

அன்னுார் : மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.குன்னத்தூரில், சமுதாயக் கூடத்தில், 'அட்மா' திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி வகுப்பு நடந்தது. வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்து பேசுகையில், விவசாயத்தின் ஆதாரமே மண் தான். மண்ணின் வளத்தை காக்க வேண்டும். தாவரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமான ஆக்சிஜனை மண் தருகிறது. மண் நீரை தேக்கி வைக்க கூடியதாகவும், நுண்ணுயிர்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். மண் பரிசோதனை செய்வதன் வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டும் உரம் இடலாம். இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். நுண்ணுயிர்களை அதிகப்படுத்தும் உரங்களை இடலாம், என்றார். வேளாண் அறிவியல் நிலைய இள நிலை ஆராய்ச்சியாளர் துரைசாமி பேசுகையில், செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து மண்ணில் அமைந்திருக்கும். மண்ணில் கார அமிலத்தன்மை 6 முதல் 6.8 வரை இருந்தால் அது வளமான மண் ஆகும். மேலும் மண் வடியக் கூடியதாக இருக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை