| ADDED : ஆக 03, 2024 05:56 AM
வால்பாறை: வால்பாறையில் மழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.வால்பாறையில் பருவமழை பெய்யும் நிலையில், மழை கால முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், பொள்ளாச்சி சப்- கலெக்டர் கேத்ரின் சரண்யா, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வால்பாறையில் பருவமழையின் போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.23வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில், 2000 மணல் மூட்டைகளை கொண்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இயற்கை சீற்றத்தை தடுக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், என, தெரிவிக்கப்பட்டது.