உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணாமலை மீது அவதுாறு காங்., மீது கமிஷனரிடம் புகார்

அண்ணாமலை மீது அவதுாறு காங்., மீது கமிஷனரிடம் புகார்

கோவை;பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையை மரியாதைக் குறைவாக பேசிய காங்., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.பா.ஜ., இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ண பிரசாத் தலைமையிலான பா.ஜ., வினர், போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர். மனுவில், 'இளைஞர் காங்கிரஸார் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்றும், தோல் உரிக்கப்படும் என்றும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி, கோஷம் எழுப்பினர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.பா.ஜ., இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் பிரதேவ், நிர்வாகிகள் ஆதிவேல், பூர்ணிமா, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி