மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
17 hour(s) ago
நாளைய மின்தடை
17 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
17 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
17 hour(s) ago
பொள்ளாச்சி;'நாபிட்' நிறுவனம் கொள்முதல் செய்த கொப்பரையை இப்பவே விற்பனை செய்யக்கூடாது, என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தினார்.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரிடம் மனு கொடுத்தனர்.அதன்பின், எம்.எல்.ஏ., ஜெயராமன் கூறியதாவது:தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளது. தற்போது தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்நிலையில், 'நாபிட்' வாயிலாக குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்த கொப்பரையை அரசு விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இவ்வாறு விற்பனை செய்யும் பட்சத்தில், வெளி மார்க்கெட்டில் மேலும் தேங்காய், கொப்பரை விலை கடுமையாக வீழ்ச்சியடையும். விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர்.என்ன நோக்கத்துக்காக மத்திய அரசு 'நாபிட்' வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்ததோ, அந்த திட்டமே முழுமையாக விவசாயிகளுக்குபயன் அளிக்காமல் வீணாகிவிடும்.எனவே, தென்னை விவசாயிகளின் நலன் கருதி, தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும் மாதங்களான ஜன., -- மார்ச் மாதங்களில் 'நாபிட்' நிறுவனம் கொப்பரையை விற்பனை செய்ய வேண்டும்.இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago