உள்ளூர் செய்திகள்

இலவச யோகா பயிற்சி 

கோவை:ரிஷி யோகா சென்டர் சார்பில் ஞாயிறுதோறும் இலவச யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. 'ரிஷி யோகா சென்டர்' சார்பில் பட்டணம் புதுார் பகுதியில் உள்ள கீர்த்தனா மகாலில் யோகா வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதில் 100க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது, பொது மக்களுக்கு உடல் மற்றும் மன நிலை மேம்பட வாரந்தோறும் இலவச யோகா பயிற்சி அளிக்க ரிஷி யோகா சென்டர் உரிமையாளர் சதீஷ்குமார் திட்டமிட்டுள்ளார். அதன்படி, வரும், ஞாயிறு முதல் ஒவ்வொரு வாரமும் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 11 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பங்கேற்லாம். பங்கேற்க விரும்புவேர் 98422 57825, 90420 62324 ஆகிய எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை