உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசுமை தின விழா கொண்டாட்டம்

பசுமை தின விழா கொண்டாட்டம்

கோவை : குனியமுத்துார், சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 'பசுமை தின விழா' சிறப்பாக கொண்டாடப்பட்டது.சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழலையர் வகுப்பு மாணவர்கள் பசுமை தின விழாவை கொண்டாடினர்.மாணவர்கள் அனைவரும் பச்சை நிற ஆடைகளில் வந்திருந்தனர். பசுமையான செடி, கொடிகள் போல மாறுவேடம் அணிந்து வந்து, பசுமையின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.பள்ளியின் அறங்காவலர் ரவீந்திரன், பள்ளி யின் முதல்வர் கார்த்திகாயினி, துணை முதல்வர் யோகிதா மற்றும் ஆசிரியர்கள், விழாவில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை