உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆம்னி பஸ்களுக்கு இனி இரு இடங்களில் மட்டுமே ஸ்டாப்

ஆம்னி பஸ்களுக்கு இனி இரு இடங்களில் மட்டுமே ஸ்டாப்

கோவை:மாநகரில் அதிகரித்துவரும் வாகன எண்ணிக்கையால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, அவிநாசி ரோட்டில் உயர்மட்ட பாலப்பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளாலும், ஆம்னி பஸ்களாலும் இரவு நேரங்களில், நெரிசல் ஏற்பட்டு பொது மக்களும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.எனவே, ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றுவதற்கு, காந்திபுரம் மற்றும் டைடல் பார்க் அருகே என, இரு இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று பஸ்களில் ஏறிச்செல்ல வேண்டும்.காலதாமதமாக வரும் பயணிகளுக்காக, பஸ்களை ரோட்டில் நிறுத்திவைத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என, மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை