| ADDED : மார் 25, 2024 01:01 AM
கோவை:சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. சி.எம்.எஸ்.,கல்லுாரியின் 36வது விளையாட்டு தின விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில் 110 இன்பான்டரி பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் ஹரிஷ் ராமச்சந்திரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளையின் தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். விழாவின் துவக்கமாக, மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் பிரமிடு நடந்தது. தொடர்ந்து, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர். விளையாட்டு தின விழாவில், சி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் அசோக், செயலாளர் வேணுகோபால், பொருளாளர் ரவிக்குமார், கல்லுாரி முதல்வர்கள் ரவிக்குமார், முகமது அலி, உடற்கல்வித்துறை இயக்குனர் தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.