பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது.இன்டர்நேஷனல் சின்டோகான் காரத்தே மற்றும் தமிழ்நாடு கராத்தே விளையாட்டு மேம்பாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான கராத்தே போட்டி, பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது.இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் ஆர்கனைசிங் கமிட்டி சேர்மன் பஞ்சலிங்கம் வரவேற்றார்.சின்டோகான் காரத்தே பெடரேஷனின் துணை சேர்மன் நித்தியானந்தம், போட்டியை துவக்கி வைத்தார்.முதன்மை எக்ஸாமினர் சோஷிகான் மயில்சாமி, ஆர்கனைசிங் கமிட்டி தலைவர் முத்தையா சென்சாய், சின்டோகன் கராத்தே பெடரேஷன் நிர்வாக அலுவலர் ஸ்ரீ சுதாகர், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.போட்டிகள், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வயது மற்றும் எடை அடிப்படையில் மாணவர்கள் வகைப்படுத்தி நடத்தப்பட்டன. கோவை, ஊட்டி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட, ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அதில், கட்டா, குமிட்டே, டீம் கட்டா என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாணவர்களும் முழு திறமை வெளிப்படுத்தி அசத்தினர். போட்டியில், நான்கு பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் இரண்டு இடம் பெற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.