உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரியால் உடைந்த மின்கம்பங்கள் ஒயரை இழுத்துச்சென்றதால் பாதிப்பு

லாரியால் உடைந்த மின்கம்பங்கள் ஒயரை இழுத்துச்சென்றதால் பாதிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே மின் ஒயரை, டிப்பர் லாரி இழுத்துச் சென்றதில் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதி போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது.இந்நிலையில் நேற்று காலை பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. ஊஞ்சவேலாம்பட்டி அருகே டிப்பர் லாரி, மின் ஒயர் சிக்கி இழுத்துச் சென்றது.அதில், ரோட்டோரம் இருந்த மின்கம்பம் சேதமடைந்து இரண்டாக உடைந்து விழுந்தது; எதிர்புறம் இருந்த மின்கம்பமும் சேதமடைந்தது.மின்சாரம் சென்று கொண்டு இருந்த சூழலில், இந்த விபத்து நடைபெற்றாலும், அவ்வழியாக யாரும் செல்லாத நிலையில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த, இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் வேகமாக பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை