உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தவறி விழுந்து பெயின்டர் பலி

தவறி விழுந்து பெயின்டர் பலி

போத்தனூர் : போடிபாளையம், அன்னை அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் பிரவீன்குமார். இவரது வீட்டிற்கும் மேல் இரண்டாவது மாடியில் பெயின்ட் அடிக்கும் வேலை நடக்கிறது. இதனை கரூர், ராக்கம்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இப்பணியில் சூலூரை சேர்ந்த குழந்தைவேலு ஈடுபட்டார். அப்போது குழந்தைவேலு கயிற்றில் பலகையில் அமர்ந்தபடி, பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தார். எதிர்பாராவிதமாக தவறி கீழே விழுந்து, படுகாயமடைந்தார். உடனிருந்தோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுக்கரை போலீசார், ஆண்டியப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை