உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீட்டு விளையாடியவர்கள் கைது

சீட்டு விளையாடியவர்கள் கைது

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வரதனுார் ஊராட்சி செங்குட்டைபாளையத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவது குறித்து, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், செங்குட்டைபாளையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது வாய்க்கால் மேடு பகுதியில், இதே ஊரைச்சேர்ந்த சரவணகுமார், 40, சதீஷ், 42, ரவி, 42, ரமேஷ், 35, நாகராஜ், 38, கணேஷ், 45, செல்வகுமார், 39 ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடியதை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.மேலும், அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை