உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிநாட்டவர்களை ஈர்ப்பதில் தமிழகத்துக்கு 2 வது இடம்

வெளிநாட்டவர்களை ஈர்ப்பதில் தமிழகத்துக்கு 2 வது இடம்

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் காரமடையில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை கூட்டம் தி.மு.க., சார்பில் நடந்தது.இதில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் பேசியதாவது: தி.மு.க. ஆட்சியில், பள்ளிக்கு குழந்தைகள் செல்லாவிட்டால், வீடு தேடி சென்று குழந்தைகள் ஏன் செல்லவில்லை என விசாரித்து, மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.மாதம் தோறும் 1.15 கோடி மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழக்கப்படும். உலக முதலீட்டாளர் மாநாடு வாயிலாக ரூ. 6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு முதலீடு பெறப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா துறை மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்திய அளவில் வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதில் 2 வது இடத்தில் உள்ளோம். விரைவில் முதல் இடத்திற்கு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை