| ADDED : ஜூலை 31, 2011 03:06 AM
கோவை : பாரதியார் பல்கலை அளவிலான சதுரங்க போட்டியில், பி.எஸ்.ஜி., கல்லூரி
19 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.கோவை இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரியில் நடந்த பல்கலை அளவிலான சதுரங்கபோட்டிகள் நடந்தன. கடந்த 26,
27ம் தேதிகளில் நடந்த குழுப்போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி 19 புள்ளிகளைப்
பெற்று முதலிடத்தையும், சி.எம்.எஸ்., கல்லூரி 18.5 புள்ளிகளுடன்
இரண்டாமிடத்தையும், ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி 18 புள்ளிகள் பெற்று
மூன்றாமிடத்தையும் பிடித்தது. 28, 29ம் தேதிகளில் நடந்த தனிநபர்
போட்டியில், கிருஷ்ணம்மாள் கல்லூரியைச் சேர்ந்த வித்யா 7.5 புள்ளிகள்
பெற்று முதலிடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு
கூடுதல் துணைகமிஷனர் சுந்தரவடிவேல் பரிசுகளை வழங்கினார். இதில், பாரதியார்
பல்கலை உடற்கல்வி இயக்குநர் முருகவேல், கல்லூரி முதல்வர் பாலுசாமி,
செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.