உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒலிம்பிக் தங்கம்: ஓம்கார் சிங் லட்சியம்

ஒலிம்பிக் தங்கம்: ஓம்கார் சிங் லட்சியம்

மேட்டுப்பாளையம் : ''ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது தான் என் லட்சியம்,'' என, காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 3 தங்கப்பதக்கங்களை பெற்ற ஓம்கார் சிங் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓம்கார் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:ஊக்க மருந்து பயன்படுத்தும் வீரர்கள் உயிர் இழக்க வாய்ப்பு உள்ளது. இது சட்ட விரோதமான செயல் மட்டுமல்ல; அதனால் வீரர்களின் உடல் நலம் பாதிப்பதோடு, நாட்டின் கவுரவமும் பாதிக்கிறது. நல்லவை இல்லாதது சமுதாயத்தில் தடை செய்யப்படுகிறது; ஊக்க மருந்தும் தடை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு விதிமுறைகளுக்கு எதிராக யார் எதை பயன்படுத்தினாலும் அவர் நிச்சயம் தண்டனை பெறுவார். இந்திய அரசு ஊக்க மருந்து விசயத்தில் கடுமையாக உள்ளது. துப்பாக்கி சுடுதலில் பிஸ்டல், சாட்கட், ரைபில் என மூன்று வகைகள் உள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உள்ளன. அடுத்து நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று துப்பாக்கி சுடுதலில் தங்கம் பெற்று, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது தான் எனது லட்சியம், அதற்கான கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு விளையாட்டு வீரர் ஓம்கார் சிங் கூறினார்.பேட்டியின் போது இந்திய கப்பல் படை பயிற்சியாளர் சஞ்சய் தத், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி தாளாளர் மணிமேகலை, செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை