உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீரின்றி தவிக்கும் பறவைகள் பாதுகாக்க முன்வரலாமே!

தண்ணீரின்றி தவிக்கும் பறவைகள் பாதுகாக்க முன்வரலாமே!

பொள்ளாச்சி;ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில், மொட்டை மாடி மற்றும் மரங்களில், பறவைகளுக்காக தானியங்கள், தண்ணீர் வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுகோடை காலம் துவங்கியுள்ளதால், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் சுட்டெரிக்கும் வெயில் கடுமையாக வாட்டுகிறது. அவ்வகையில், நேற்று, 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.மக்கள் வீடுகளில், எந்நேரமும் மின்விசிறிகளை சுழலவிட்டும், ஏசி பயன்படுத்தியும் வருகின்றனர். அதேநேரம், பறவைகள், விலங்கினங்கள் தாகம் தணிக்க தண்ணீர் இல்லாமலும் வெப்பத்தை தாங்க முடியாமலும் அவதிப்படுகின்றன.இத்தகைய சூழலில், ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில், மொட்டை மாடி மற்றும் மரங்களில், பறவைகளுக்காக தானியங்கள் வைக்கவும், குவளையில் தண்ணீர் வைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது: பறவைகளை காக்க மக்கள் முன்வர வேண்டும். பறவைகளை காக்க நினைக்கும் சிலர் மட்டுமே, கோடையில் தங்கள் வீடுகளில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குகின்றனர்.மரங்கள் அழிப்பு, ரசாயன பயன்பாடு அதிகரிப்பு என பல காரணங்களால், பறவைகள் பாதிக்கின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நீர்நிலைப் பகுதிகளில் பறவைகள் அலைமோதுகின்றன.எனவே, வீடுகளின் மாடிகளிலும், வாசலிலும் குவளையில் தண்ணீர் வைப்பதுடன், சிறிய அளவிலான பாத்திரத்தில் அரிசி, கம்பு உள்ளிட்ட தானிங்களை வைக்கலாம். தன்னார்வ அமைப்புகள், இத்தகைய பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி