உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜோய் ஆலுக்காஸில் வைர நகை கண்காட்சி

 ஜோய் ஆலுக்காஸில் வைர நகை கண்காட்சி

கோவை: காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஜோய் ஆலுக்காஸில், 'பிரில்லியன்ஸ் டையமண்ட் ஜூவல்லரி ஷோ' என்ற, வைர நகை கண்காட்சி நடக்கிறது. வரும், 21ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், மணமகளுக்கான வைர நகை செட் முதல், தினசரி அணிவதற்கான நவீன வைர நகைகள் வரை ஏராளமான டிசைன்களில் உள்ளன. பாரம்பரியத்தையும், நவீன வடிவமைப்பையும் ஒன்றிணைக்கும் சிறப்பு கலெக் ஷனும் இடம்பெற்றுள்ளன. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ''இந்த வைர நகை கண்காட்சிக்கென விசேஷமாக வைர நகைகளை வடிவமைத்திருக்கிறோம். வாடிக்கையாளர்கள் அழகு, தனித்துவம் மற்றும் கலைநயம் ஆகிய அனைத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தும், வைர நகைகளை வாடிக்கையாளர்கள் இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கலாம்,'' என்றார். வரும், 21ம் தேதி கண்காட்சி நடக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, இலவச தங்க நாணயம் வழங்கப்படுகிறது. கண்காட்சியை கே.ஜி.மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், பார்க் கல்வி குழுமங்களின் சி.இ.ஓ.அனுஷா ரவி, வணிக மேலாளர் ராஜேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ