உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனைமலையில் 115 பள்ளி செல்லா குழந்தைகள்

ஆனைமலையில் 115 பள்ளி செல்லா குழந்தைகள்

ஆனைமலை : ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 115 பள்ளி செல்லாக்குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக வட்டார வளமையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பு கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில் ஐந்து முதல் 14 வயதிற்கு உட்பட்ட 115 குழந்தைகள் பள்ளி செல்லும் வயதிலும் பள்ளி செல்லாமல் இருந்ததால் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் பணி நடந்தது. ஆனைமலை அண்ணாநகர் பள்ளியில் 21 பேரும், சின்னார்பதி பள்ளியில் 12 பேரும், சோமந்துறைசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 பேரும், நரிக்கல்பதி பள்ளியில் 10 பேரும், தென்சங்கம்பாளையம் பள்ளியில் 50 பேரும், சேர்க்கப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம் மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த தகவலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெரியஅம்மனி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ