உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கிரிக்கெட் லீக்; சச்சின் சி.சி., வெற்றி

மாவட்ட கிரிக்கெட் லீக்; சச்சின் சி.சி., வெற்றி

கோவை;கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின், மூன்றாம் டிவிஷன் லீக் போட்டியில் ஹரிஷின் சதம் கைகொடுக்க, சச்சின் சி.சி., அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகள், மாவட்டத்தின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.இதில், இ.ஏ.பி., கிரிக்கெட் மைதானத்தில் நடந்த, மூன்றாம் டிவிஷன் லீக் போட்டியில் சச்சின் கிரிக்கெட் கிளப் அணி, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் அணியை வீழ்த்தியது.கே.எம்.பி., அணிக்கு ரோகித் (58), வினோத் குமார் (41) ஆகியோர் பொறுப்பாக விளையாடினர். சச்சின் அணியின் சிவ அழகு நாச்சியப்பன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.சச்சின் சி.சி.,யின் ஹரிஷ் (105*) சதம் விளாசினார். சையது நுார் இதயதுல்லா (31) நிதானமாக விளையாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை