உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமரை இழிவுபடுத்தி பதிவு தி.மு.க. பிரமுகர் வீடு முற்றுகை

ராமரை இழிவுபடுத்தி பதிவு தி.மு.க. பிரமுகர் வீடு முற்றுகை

பொள்ளாச்சி:உ.பி. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், பொள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலர் செல்வராஜ் என்பவர், சமூக வலைதளத்தில், 'அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு; ராமருக்கு பிடித்த மாட்டுக்கறி பிரியாணி ரெடி' என ராமரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சி நகர பா.ஜ. தலைவர் பரமகுரு தலைமையில், பா.ஜ.வினர் நேற்று, செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு பஜனை பாடல்களை பாடினர்.அப்போது, செல்வராஜின் மகனும், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளருமான மணிமாறன் மற்றும் குடும்பத்தினர், எதிர் கோஷமிட்டனர். இருதரப்பும் மாறி கோஷங்களை எழுப்ப, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. சம்பவ இடத்தில் இருந்த போலீசார், இரு தரப்பையும் விலக்கினர்.முன்னாள் மாவட்ட செயலர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, தி.மு.க.வினர், காந்தி சிலை அருகே சில நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை