உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எந்த குழந்தையையும் யாருடனும் ஒப்பிடாதீர்

எந்த குழந்தையையும் யாருடனும் ஒப்பிடாதீர்

கோவை : சின்ன மேட்டுப்பாளையம், பப்ளிக் ஸ்கூலின் 15வது ஆண்டு விழா நடந்தது. முன்னாள் ஐ.ஜி., பாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், ''ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள்; தனித்திறமை பெற்றவர்கள். எந்த குழந்தையையும், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம்,'' என்றார்.கடந்த கல்வியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டு மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.ஜி 20 உச்சி மாநாட்டில், இந்தியாவின் தலைவர் பதவியை நினைவுகூரும் வகையில், 'வசுதைவ குடும்பம் ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம்' என்ற தலைப்பில் நடனம், நாட்டியம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பள்ளி தாளாளர் நிர்மலா, அறங்காவலர் மோகன் லால் பட்டேல் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை