மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
7 hour(s) ago
நாளைய மின்தடை
7 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
கோவை : கோவையில் உள்ள ரேஷன் கடைகளில், 93 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு உள்ளதாக, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில், 11.5 லட்சம் அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம், 1,000 ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் கடந்த, 10ம் தேதி முதல் 14 வரை வழங்கப்பட்டது. இதில் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், 93 சதவீதம் பேர் பொங்கல் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் பெற்றுள்ளனர்.இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இல்லாமல், 93 சதவீதம் அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பணம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். ''பெறாதவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா?'' என கேட்ட போது, ''அரசு தரப்பில் இதுவரை அப்படி எதுவும் தெரிவிக்கப்படவில்லை,'' என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago