உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பூங்காக்களை பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு

 பூங்காக்களை பராமரிக்க மக்கள் எதிர்பார்ப்பு

கோவை: மாநகராட்சி பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பூங்காக்களை, புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் உலக செம்மொழி மாநாடு நடந்த போது, பல இடங்களில் புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. பல சிறுவர் பூங்காக்களில், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல பூங்காக்களில் பூச்செடிகளே இல்லை. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் உள்ள பல பூங்காக்கள், ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்படுகின்றன. சில பூங்காக்களை அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பராமரித்து வருகின்றனர். அம்ருத் திட்டத்தில் எட்டு பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன. இப்போது எல்லா பூங்காக்களையும் புனரமைக்கும் பணி நடக்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை