உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்: கோடைக்கு முன்பே துவங்கியது வறட்சி

தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்: கோடைக்கு முன்பே துவங்கியது வறட்சி

நெகமம்:நெகமம் மற்றும் சுற்றுப்பகுதியில் நீரின்றி கடும் வறட்சி நிலவுவதால், விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் சரிவர பெய்யாததால், இந்த ஆண்டு கோடை காலம் துவங்கும் முன்பே, கடும் வறட்சி நிலவுகிறது.தற்போது, குளம், ஏரி மற்றும் கிணற்றுகள், ஒரு சில இடங்களில் நீர்மட்டம் குறைந்தும், ஒரு சில இடங்களில் வறண்டும் காணப்படுகிறது. இதனால், பயிர்களுக்கு பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.நெகமம் பகுதியில், தென்னை அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. இதனால், பாசன செய்ய நீர் அதிகம் தேவைப்படும். இந்நிலையில், தென்னை மரங்கள்வறட்சியில் கருகி மடிவதை தவிர்க்க, தற்போது தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து நெகமம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:தென்னையில் உயர் கலப்பின ரகங்களுக்கு, சொட்டு நீர் பாசனம் வாயிலாக, நாள் ஒன்றுக்கு, 85 லிட்டர் தண்ணீர் அளிக்க வேண்டும். நாட்டு ரக மரங்களுக்கு, 65 லிட்டர் கொடுக்க வேண்டும். கால்வாய், குழாய் பாசனம் செய்தால்ஒரு வாரத்துக்கு, 250 முதல் 300 லிட்டர் தண்ணீர் வரை அளிக்க வேண்டும்.தற்போது, கிணறு போன்ற நீர் ஆதாரங்கள் வற்றியதால், விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக குழி எடுத்து, பிளாஸ்டிக் கவர் விரித்து, தண்ணீரை சேமித்து விவசாயம் செய்கின்றனர். ஒரு லாரி தண்ணீர், 20 மரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் தண்ணீருக்கு செலவிட வேண்டியுள்ளது.புதிதாக போர்வெல் அமைத்து தண்ணீர் பெறுவதற்கும் லட்சக்கணக்கில் செலவு ஏற்படும். அதனால், தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம். கோடை மழை கை கொடுத்தால், தென்னை விவசாயம் செழிக்கும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை