உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விலங்கியல் தேர்வு ஈசி; கணித தேர்வு ரொம்ப ஈசி

விலங்கியல் தேர்வு ஈசி; கணித தேர்வு ரொம்ப ஈசி

அன்னுார்:பிளஸ் 2 விலங்கியல் மற்றும் கணித தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.அன்னுார் வட்டாரத்தில் உள்ள அன்னுார், ஆனையூர், சொக்கம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி என ஆறு பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவியர் மூன்று மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.நேற்று கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கு தேர்வு நடந்தது.

விலங்கியல் தேர்வு ஈசி

தனுஷ்யா ஸ்ரீ, அன்னுார்.விலங்கியல் பாடத்தில் 70 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண்ணுக்கு 15 வினாக்களும், இரண்டு மதிப்பெண்களுக்கு ஒன்பது வினாக்கள் தரப்பட்டு ஆறு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் ஆறு வினாக்களும், ஐந்து மதிப்பெண் ஐந்து வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன. அனைத்தும் எளிதாக இருந்தது.தீபிகா, அன்னுார்.விலங்கியல் பாடத்தில், அதிக மதிப்பெண் பெற முடியும். மூன்று மதிப்பெண் வினாக்கள் தவிர மற்ற அனைத்து வினாக்களுக்கும் முழு மதிப்பெண் பெற முடியும்.

சென்டம் பெறலாம்

நிஷாந்த், அன்னுார்.கணித பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள், 20 கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் தலா ஏழு கேட்கப்பட்டிருந்தன. இவை அனைத்துமே எளிதாக இருந்தன. 90 க்கு 90 மதிப்பெண் பெறவும் வாய்ப்பு உள்ளது.ரியாஸ், அன்னுார்.கணித தேர்வில் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிக எளிதாக இருந்தன. மிக எளிதாக தேர்ச்சி பெறலாம். அதிக மதிப்பெண் பெற முடியும் என்றார். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்கள் அடங்கிய குரூப் எடுத்த மாணவர்களுக்கு நேற்று பிளஸ் 2 தேர்வு முடிந்ததால் அந்த குரூப் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டும், ஒருவர் மீது ஒருவர் இங்க் தெளித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை