உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.2.94 கோடி திட்டப் பணிகள் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

ரூ.2.94 கோடி திட்டப் பணிகள் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

வேப்பூர் : வேப்பூர் பகுதியில் 2.94 கோடியில் அமைக்கப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.வேப்பூர் ஊராட்சியில் தாட்கோ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நபார்டு வங்கி மூலம் ரூ. 1.25 லட்சத்தில் நவீன வசதிகளுடன் சமுதாயம் கூடம், சேப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ரூ. 1.69 கோடியில் வகுப்பறை கட்டடம், கீழக்குறிச்சியில் வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் திட்டத்தில் மரகத பூஞ்சோலை காடு அமைக்கப்பட்டது.இவற்றை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து, சேப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் மதிய சத்துணவை ருசி பார்த்தார். அப்போது, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு சுவையாக சமைத்திட சமையலருக்கு அறிவுறுத்தினார். கீழக்குறிச்சி கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, அணைக்கட்டு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன், நல்லுார் காங்., வட்டார தலைவர் முருகானந்தம், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, ஊராட்சித் தலைவர்கள் மகேஸ்வரி, தெய்வானை, ராணி, வி.ஏ.ஓ., பிரியா, சமூகஆர்வலர் கதிர்வேல், உதவியாளர் பாஸ்கர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி