உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

கடலுார்: கடலுாரில், அமைச்சர் தலைமையில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.தமிழக முதல்வர் தலைமையில் சென்னை பல்கலைகழகத்தில் நேற்று போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். காணொளி காட்சி வாயிலாக அந்நிகழ்வு, கடலுார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில், கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாணவர்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ராஜாராம் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, மாநகராட்சி கமிஷனர் அனு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை