| ADDED : ஜூலை 20, 2024 05:27 AM
பண்ருட்டி: பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை நகரமன்ற சேர்மன் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-2023ம் ஆண்டிற்கான நபார்டு திட்டத்தின் கீழ் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப் பட்டது.இதனை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். பள்ளியில் நடந்த திறப்பு விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஆல்மர் செல்வம் தலைமை தாங்கினார்.பண்ருட்டி நகரமன்ற சேர்மன் ராஜேந்திரன் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். பள்ளி வளர்ச்சிக்குழு சண்முகவள்ளி பழனி, துணை தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் கோவிந்தராஜ், ேஹமலதா, மாலதி வரவேற்றனர்.இதில் கவுன்சிலர்கள் முகமதுஹனிபா, கிருஷ்ணராஜ், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.