உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மானியத்தில் பசுந்தாள் உர விதை வழங்கல்

மானியத்தில் பசுந்தாள் உர விதை வழங்கல்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், தமிழ்நாடு முதல்வர் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் ' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 50 சதவிகித மானிய விலையில் பசுந்தாள் உர விதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மங்கலம்பேட்டை துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் ரிச்சர்ட் வரவேற்றார்.மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, தி.மு.க., ஒன்றிய பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கினர்.இதில், கோவிலானுார், விசலுார், கர்னத்தம், மாத்துார், புலியூர், எம்.பரூர், சின்னப்பரூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் பிரகாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை