உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் அதிகபட்சமாக குடிதாங்கியில் 67.52 மி.மீ., மழை 

மாவட்டத்தில் அதிகபட்சமாக குடிதாங்கியில் 67.52 மி.மீ., மழை 

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் பகலில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல், நேற்று காலை 8:30 மணி வரை பெய்த மழை அளவு பின்வருமாறு:எஸ்.ஆர்.சி.குடிதாங்கியில் 67.5மி.மீ., காட்டுமயிலுார் 40, கலெக்டர் அலுவலகம் 37.4, கடலுார் 34.4, மேமாத்துார் 22, வானமாதேவி 21.6,பண்ருட்டி 18.4,வேப்பூர் 16,குப்பநத்தம் 15, விருத்தாசலம் 11.2,குறிஞ்சிப்பாடி 5, பெலாந்துறை 4.4, சேத்தியாத்தோப்பு 2.6மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ