உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்

புவனகிரி : புவனகிரி திருக்குறள் இயக்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது.புவனகிரி தனியார் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் திருக்குறள் இயக்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சந்துரு வரவேற்றார். தில்லை தமிழ்ச்சங்க செயலாளர் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 'புறங் கூறாமை' என்ற அதிகாரம் குறித்து சொற்பொழிவாற்றினார்.கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி தமிழாசிரியர் அருள் ஜோதி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயராமன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நெடுமாறன் கருத்தரங்கம் நடத்தினர். நிகழ்ச்சியில் புவனகிரி சுற்றுபகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை