உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனவளர்ச்சி குன்றிய இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

மனவளர்ச்சி குன்றிய இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

சேத்தியாத்தோப்பு:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சந்தானலட்சுமி தம்பதியின் மகன்கள் திலீப், 16, தினேஷ், 14. மனவளர்ச்சி குன்றிய இவர்கள், கடலுாரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில், முறையே 9 மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களின் தாய் சந்தானலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். தந்தை ராமமூர்த்தி சென்னையில் வேலை செய்து வருகிறார். இதனால், இருவரும் பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தனர்.இந்நிலையில், தேர்வு முடிந்து விடுமுறையில் கடந்த வாரம் நந்தீஸ்வரமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு இருவரும் வந்திருந்தனர். நேற்று காலை 11:00 மணிக்கு குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள குளத்தில் இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.தகவலறிந்த சோழத்தரம் போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை