உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் நாளை தே.மு.தி.மு.க., பேரணி

பண்ருட்டியில் நாளை தே.மு.தி.மு.க., பேரணி

கடலுார் : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி பண்ருட்டியில் நாளை அமைதி பேரணி நடக்கிறது.கடலுார் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி பண்ருட்டி எம்.ஜி.ஆர்.,சிலை அருகில் நாளை (11ம் தேதி) காலை 9:30 மணிக்கு அமைதி பேரணி துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து, பண்ருட்டி ஆர்.கே.எம்.கன்வென்ஷன் சென்டரில் 11:00 மணிக்கு புகழ் அஞ்சலி கூட்டம் நடக்கிறது.இதில், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாய சங்கத் தலைவர்கள், வணிக சங்க பிரதிநிதிகள், பொது நல அமைப்புகள், தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து, மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை