உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் பெண்கள் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு

கடலுார் பெண்கள் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு

கடலுார்: கடலுார் திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலையில் நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் ரூ. 63 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அதனை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பள்ளியில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வகுப்பறையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர்கள் சரஸ்வதி, சாய்துநிஷா மற்றும் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி கடலுார் மாவட்ட கல்வி அலுவலர் சங்கர், தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை