உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லால்பேட்டையில் கும்பாபிஷேகம்

லால்பேட்டையில் கும்பாபிஷேகம்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள லால்பேட்டையில் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.பூஜைகள் 19ம் தேதி துவங்கியது. அன்று மாலை ரக் ஷாபந்தனம், முதல் காலயாகசாலைபூஜையும், 20ம் தேதி காலைதோரண பூஜையுடன், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, திருவாசகப் பாராயணம் நடந்தது.இரண்டாம் யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர்கலசங்கள் புறப்பாடாகி, கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கருவறையில் உள்ள காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளைகும்பாபிஷேக திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !