உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரயில்வே மேம்பாலம் விவசாயிகள் மனு

 ரயில்வே மேம்பாலம் விவசாயிகள் மனு

கடலுார்: வரக்கால்பட்டு விவசாயிகள், மேம்பாலம் அமைக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு: கடலுார் அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் ரயில்வே கிராசிங் 154 உள்ளது. இதன் அருகில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் மகசூல் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள், டிராக்டர், அறுவடை இயந்திரம் செல்வதற்கான வழியாக உள்ளது. தற்போது இந்த லெவல் கிராசிங்கை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனால் விளை நிலங்களுக்கு செல்லும் வழி தடைபட்டு இடுபொருட்கள், விளை பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே லெவல் கிராசிங் 154ல் தற்போது உள்ள நிலை தொடரவோ அல்லது மேம்பாலம் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை