உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சாலை விரிவாக்க பணி ஆய்வு

 சாலை விரிவாக்க பணி ஆய்வு

சேத்தியாத்தோப்பு: சாலை அகலப்படுத்தும் பணியினை சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் 'திடீர்' ஆய்வு செய்தார். சேத்தியாத்தோப்பு-கீரப்பாளையம் சாலையை 7 மீட்டராக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சி.சாத்தமங்கலத்தில் துவங்கி பாழ்வாய்க்கால் வரை 2 கி.மீ., துாரம் வரை நடைபெறும் பணியில் சாலை இருபுற ஓரங்களிலும் தால, 1 மீட்டருக்கு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை 11:00 மணியளவில் சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் ஆய்வு செய்து, பணியாளர்களிடம் விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தினார். சிதம்பரம் உதவி பொறியாளர் கார்த்தி, சாலை ஆய்வாளர் குலோத்துங்கன் உள்ளிட்டோர், ஆய்வின் போது உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை