உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாடலீஸ்வரர் கோவிலில் 15ல் ருத்ர அபிேஷகம்

பாடலீஸ்வரர் கோவிலில் 15ல் ருத்ர அபிேஷகம்

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோவிலில், வரும் 15ம் தேதி ஏகாதச ருத்ர அபிேஷகம் நடக்கிறது.கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீருத்ர பாராயணம் செய்து, கலச அபிேஷகம் செய்யப்படுகிறது. இந்தாண்டிற்கான ஏகாதச ருத்ர அபிேஷகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 2:30 மணிக்கு கணபதி பூஜை, கலச பூஜை, மகந்யாச ஜபம் மற்றும் மாலை 4:00 மணிக்கு மூலவர் அபிேஷகம், ருத்ர ஜபம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு வசோர்தாரா ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் மாலை 6:00 மணிக்கு கலசாபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை