உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

கடலுார்: புதுச்சேரி தமிழ் சங்கத்தில் பாரத தேசம் என்ற தலைப்பில் சிறப்பு கவியரங்கம், தமிழ் ஆளுமைகளுக்கு விருது வழங்கும் விழா மற்றும் டாக்டர் கலைவேந்தன் எழுதிய சிகரம் தொடலாம் வா, மனித மருத்துவம் மற்றும் என்னுள் நான் என்ற நுால்கள் வெளியீடு ஆகிய முப்பெரும்விழா அகில உலக தமிழ் நண்பர்கள் சமூக இயக்கம் சார்பில் நடந்தது.புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு நுால்களை வெளியிட்டார்.நுால்களின் முதல்பிரதியை தமிழக பா.ஜ., மாநில ஆலயம் மற்றும் ஆன்மிக மேம்பாட்டுபிரிவு செயலாளர் வினோத் ராகவேந்திரன் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். தமிழ் ஆர்வலர்கள் சீனுவேணுகோபால், முனைவர் இளமதி ஜானகிராமன் நுால் ஆய்வு செய்தனர்.கலைமாமணி ராமதாஸ் காந்தி முன்னுரை அளித்தார்.அப்போது, விஜய சாமுண்டீஸ்வரி, விஜயராணி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை