உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரிக்கு ரயிலில் வந்த 2,200 டன் கோதுமை

தர்மபுரிக்கு ரயிலில் வந்த 2,200 டன் கோதுமை

தர்மபுரி, : தர்மபுரி மாவட்டத்தில், 484 முழுநேர ரேஷன் கடைகளும், 565 பகுதிநேர ரேஷன் கடைகள் என மொத்தம், 1,049 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கார்டு வைத்துள்ள அனைவருக்கும், தமிழக அரசின் சார்பில் இலவசமாக அரிசியும் மானிய விலையில் கோதுமை, எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது.தற்போது உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து தர்மபுரிக்கு நேற்று, சரக்கு ரயிலில், 58 வேகன்களில், 2,200 டன் கோதுமை வந்தது. இதை, ரயில்வே கூட்ஸ்செட் சுமை துாக்கும் தொழிலாளர்கள், ரயிலில் இருந்து இறக்கினர். பின், அதிகாரிகளின் உத்தரவின்படி, லாரிகளில் ஏற்றி தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டியிலுள்ள இருப்பு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை