மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி அருகே நடந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கோஷ்டி மோதல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்-டது.தர்மபுரியில் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அவைத்தலைவர் நாகராஜன் தலைமையில் நேற்று நடந்-தது. தர்மபுரி அடுத்த குண்டலப்பட்டியிலுள்ள, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், கட்சி வளர்ச்சி பணி மற்றும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலில் நிர்வாகிகள், தொண்-டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட செய-லாளர் சங்கர் பேசுகையில், ''முன்னாள் அமைச்சர் அன்பழகன், 1996 ல் கட்சிக்கு வந்தவர். அனைத்து பதவிகளும் அவரே அனு-பவிக்கிறார். கட்சியினருக்கு எதுவும் செய்யவில்லை,'' என்றார். இதனால் அவரை, மேடையை விட்டு கீழே இறங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த-தோடு, அவரிடம், அ.தி.மு.க., மாநில விவசாய பிரிவு அமைப்பு செயலாளர் டி.ஆர்.அன்பழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், இரு கோஷ்டிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மேடை மீது ஏறியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டு, மண்டபம் முழுவதும் கூச்சல் குழப்பம் நிலவியது. அனைவரையும் கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்திய பின் கூட்டம் தொடர்ந்து நடந்-தது.அப்போது, மாவட்ட செயலாளர் அன்பழகன் பேசுகையில், '' ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது, தர்மபு-ரியில் மாதப்பன் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். அப்-போது, எந்த பொறுப்பும் இல்லாமல், அவருக்காக நான் தேர்-தலில் பணியாற்றினேன். 1991, 96 சட்டசபை தேர்தல்களிலும் எந்த பொறுப்பும் இல்லாமல், கட்சிக்காக உழைத்தேன். கட்சி ஆட்சியில் இருக்கும்போது, பதவிக்காக வந்து விட்டு, மீண்டும் மாற்று இயக்கத்துக்கு செல்லும் பரம்பரையில் வந்தவன் நான் இல்லை. நான் மாவட்ட செயலாளராக இருந்தாலும், எனக்கு பதி-லாக புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டாலும், சாதாரண அடிப்படை உறுப்பினராக, அ.தி.மு.க.,வில் தான் இருப்பேன்,'' என்றார்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago