உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 4 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கட்ட பஞ்சாயத்து கும்பல் மீது புகார் மனு

4 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கட்ட பஞ்சாயத்து கும்பல் மீது புகார் மனு

தர்மபுரி: சின்னக்குப்பூரில் கட்ட பஞ்சாயத்து செய்து, ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கும்பல் மீது நடவடிக்கை கோரி, 4 குடும்பத்தினர் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் நேற்று மனு அளித்தனர். இது குறித்து, பாதிக்கப்பட்ட அப்பாமணி என்பவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி ஒன்றியம், சின்னக்குப்பூரில் எனக்கு பூர்வீக நிலம் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் கடனாக பெற்ற பணத்தை, வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டேன். இந்நிலையில், பணம் கொடுக்கவில்லை எனக்கூறி, என் பூர்வீக நிலத்தை எழுதி கொடுக்க, கட்ட பஞ்சாயத்து செய்து நெருக்கடி கொடுத்தனர். தொடர்ந்து, எனக்கு ஆதரவாக இருந்த, என்னுடைய உறவினர் குடும்பம் உட்பட, 4 குடும்பத்தினரை கடந்த, 4 ஆண்டுக்கு முன் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். அவர்கள், கோவிலுக்கு வரக்கூடாது. பொதுவழியை பயன்படுத்தக்கூடாது. அவர்களுடன், மற்றவர்கள் பேசினால் ஆண்களுக்கு, 25,000 ரூபாய், பெண்களுக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ஊர் கட்டுப்பாடு போட்டுள்ளனர். கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, தர்மபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இனியும் நடவடிக்கை எடுக்க தாமதித்தால், ரேஷன் கார்டு, ஆதாரை ஒப்படைக்க உள்ளோம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை